Tuesday 8 April 2014

படமும் என் கவிதைகளும்





எண்ணங்களுக்கும் பேனாவிற்குமான வார்த்தை போர்

மொழிக்கும் கவிஞனுக்குமான வார்த்தை யுத்தம்
மன ஓட்டத்தை வென்றிட துடிக்கும் எழுத்தோட்டம்
எழுத்தோட்டதை வென்றிட துடிக்கும் மன ஓட்டம்
முடிவில் எழுத்தையும் மனதையும் வீழ்த்தி
வென்றவன் அவனே ஆகிறான் கவிஞன்...
கவிஞன் அழிவதில்லை கவிதையும் அழிவதில்லை
பாவாக வாழ்கிறான் என்றும் நம் மொழியோடு!!!!




வெண்பா எழுத தெரியாததால் என்

அன்பால் எழுதுகிறேன்
பெண்பாலின் இலக்கணம் நீ என்று




காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்
பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும்
இடி ஓசைகளின் இன்னிசை கச்சேரியும்
உன்னை வரவேற்க தயாராயின

சில் காற்றில் நான் உரைய
முகத்தில் இட்டாய் முதல் முத்தம்
சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்

மழை துளியாய் என் மீது பொழிந்தாய்
ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்
உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்.............




"நீர் வளம் காக்க மானுடம்
செயலிட்ட சொட்டு நீர் பாசனம்
பச்சை தாவரங்களுக்கு மட்டில்லை இனி
பட்சிகளுக்கும் தான் பொருந்தும்"


"மானுடத்திற்கு முன் பிறந்தவளோ
மானுடம் வளர பிறந்தவளோ
சீரும் சிறப்புமாய் வளர்ந்தவளோ
அமிழ்தை பெயராய் கொண்டவளோ

அகமும் புறமும் விளக்கியவளே
அகரத்துடனே தொடங்கியவளே
என்றும் இளமை உடையவளே
மனதில் வீரம் விதைத்தவளே

வள்ளுவனும் பாரதியும்
உன்னை வளர்த்தனரோ
வள்ளுவனும் பாரதியும்
உன்னால் வளர்ந்தனரோ

மெல்லினமாய் வாழும் பிள்ளைகளை
வல்லினமாய் திகழ வைக்க
சித்திரை நன்னாளில் ஜெய

புத்தாண்டு தீர்மானம் கொண்டு வா தாயே"


வாழையும் தோரணமும் வாசலில் கட்டி விட்டோம்;

வாழ்த்த வரும் நெஞ்சம்தனை நேசத்துடன் வரவேற்போம்;
கண்கள் கலந்த போதே இதயமும் கலந்து விட்டதே;
கலந்த இதயங்கள் உங்கள் ஆசிகளுக்கு ஏங்குகிறதே;



கடந்து வந்த பாதை
முற்களாய் நெருடியது !!
கடக்க போகும் சோலை
பூக்களாய் வருடியது !!

என்னவோ மாயம் செய்து விட்டாய் !!
மனதின் காயம் ஆற்றி விட்டாய் !!
மாயங்கள் செய்தது உன் கண்ணோ !!
தீபங்கள் ஏந்தி வந்த என் பெண்ணோ !!

No comments:

Post a Comment