Thursday 7 March 2019


நம் உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கான முக்கிய கருவி மொழி. மொழியை பொதுவாக நம் இரண்டு வழியில் வெளிப்படுத்துகிறோம். அவை வாய் மொழி, எழுத்து மொழி.

பல நேரங்களில் நாம் வாய் மொழியாகவே நமது எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்துகிறோம். எழுத்து மொழி என்பது நம்மில் பலருக்கு பள்ளி காலங்களோடு முடிந்து விடுகிறது.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவு நாம் பெற்ற அறிவை பாதுகாக்கவும் செழுமை படுத்தவும் எழுத்து பழக்கம் முக்கியமாகிறது. எழுத்து பழக்கம் உங்கள் அறிவை பாதுகாப்பது மட்டுமில்லாமல் மொழியையும் பாதுகாக்க உதவும்.

எழுத்து பழக்கம் மக்களிடம் குறைகின்றது என்றால் அந்த மொழி அழிய ஆரம்பிக்கின்றது என்றே பொருள். எனவே நம் தாய்மொழி தமிழ் மொழியை காத்திட எழுத்து பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும்.

அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.


என்றும் எழுத்தோடு
ஆர்.கே